Best Viewed in Mozilla Firefox, Google Chrome

Tamil Nadu

24
Jun

குறுவையில் 3.30 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்: போதிய மழையின்மையால் கவலை

தஞ்சாவூர் : மேட்டூர் அணையில் குறைவான தண்ணீரே இருப்பதால், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி யில், 3.30 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
 
1.15 லட்சம் ஹெக்டேரில்...
தமிழக நெல் தேவையில், 52 சதவீதத்தை உற்பத்தி செய்யும் பகுதியாக, டெல்டா மாவட்டங்கள் உள்ளன. மேட்டூர் அணை, ஜூன் 12ல், திறக்கப்பட்டு, தொடர்ந்து போதுமான அளவுக்கு நீர் வரத்து இருந்தால், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதியில், குறுவை சாகுபடி, 1.15 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்படும். இல்லையெனில், பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள், 65 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்வர்.கடந்த, 2012ல், தண்ணீர் பற்றாக்குறையால், மேட்டூர் அணை செப்டம்பரில் திறக்கப் பட்டது. இதனால், 51 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டது. 2013ல், மேட்டூர் அணை, ஆகஸ்ட் 2ல் திறக்கப்பட்டதால், 69,471 ஹெக்டேரில் மட்டுமே, குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

நடப்பாண்டில், மேட்டூர் அணையில், 44.02 அடி நீர் மட்டுமே உள்ளதால், ஜூன், 12ம் தேதி, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே, பம்ப்செட் வசதியுள்ள, 60 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே, குறுவை சாகுபடி துவங்கி உள்ளது. இந்த பிரச்னையால், இந்த ஆண்டும், குறுவை சாகுபடியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேளாண் வல்லுனர் குழுவை சேர்ந்த, ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் கலைவாணன் கூறியதாவது:
இயல்பை விட, குறைவாகவே தென்மேற்கு பருவமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. பருவமழை பெய்து, அணையில் நீர்மட்டம் உயர்ந்தாலும் கூட, ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அணை திறந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.
 

ஆற்று பாசனம்
சமீபத்தில் பெய்த மழையை பயன்படுத்தி, பம்ப்செட் வசதிஉள்ள விவசாயிகள் மட்டுமே, நிலத்தை உழும் பணிகளை செய்து வருகின்றனர். மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படாததால், காவிரி ஆற்று பாசனத்தை மட்டும் நம்பியுள்ள, 55 ஆயிரம் ஹெக்டேரில், குறுவை சாகுபடி நடக்க வாய்ப்பில்லை. இதனால், ௩.௩௦ லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். 

தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பொருளாளர் சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது:
37.4 டி.எம்.சி., நீர்: திருச்சி முக்கொம்பு முதல், தஞ்சாவூர் அணைக்கரை வரை, காவிரி ஆற்று பகுதியில் தடுப்பணை கிடையாது. மேலும், 36 கிளை ஆறு, வாய்க்கால், பிரிவு வாய்க்கால், ஏரி, குளம் ஆகியவை துார்வராமல் கிடக்கின்றன. கடந்த ஆகஸ்ட்டில், மேட்டூரில் திறந்து விடப்பட்ட, 37.4 டி.எம்.சி., தண்ணீர், வீணாக கடலில் கலந்தது. இந்த நீரை பயன்படுத்தி, 1.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்திருக்க முடியும். உபரி நீரை, சேமித்து வைக்க முடியாத பரிதாப நிலையில் உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

 

25
Jan

நெல் பயிரில் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற இலையா...?

 தமிழகத்தில் பயிரிடப்படும் உணவுப் பயிர்களில் நெல் பயிர் பிரதானமாக உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசானப் பருவத்தில் பரவலாக நெல் பயிரிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் பிசானப் பருவத்தில் 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு நிற தோன்றல்: இரு மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களில் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற தோன்றல் காணப்படுகிறது. இந்த நிறமானது அடி இலைகளில் தொடங்கி மேற்புரம் வரையில் பரவி காணப்படும்.
அறிகுறிகள்: முதலில் அடி இலைகள் வெளிறிய மஞ்சள் நிறத்துடன் காணப்படும். பின்னர், இந்த அறிகுறிகள் மேல் இலைகள் வரைக்கும் படிப்படியாக பரவும். மஞ்சள் நிற அறிகுறிகளுக்கான காரணங்களை சரிசெய்யாமல் இருந்தால் பின்னர் ஆரஞ்சு நிறமாக மாறி இலையின் நுனி திசுக்கள் இறந்து காய்ந்து சருகுகளாக மாறும். இவ்வாறு நெல்லின் அடி இலையில் இருந்து நுனி இலை வரை காய்ந்து விடும். காயந்த இலைகளின் பயிர்களில் ஓரினச்சேர்க்கை நடைபெற முடியாது. இதனால், மகசூல் குறையும். மேலும், பாதிக்கப்பட்ட நெல் பயிர்களில் பக்க சிம்புகள் உருவாகாமல் போகும். விளைச்சல் வெகுவாகப் பாதிக்கப்படும்.
காரணங்கள்: நெல்லில் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற இலை தோன்றுவதற்கு முக்கியமாக 2 காணரங்கள் உள்ளன. மண்ணில் சாம்பல் சத்து பற்றாக்குறை, மண்ணில் அகி இரும்பு சத்துகளின் கிடைக்கையால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பானது வயல் முழுவதும் ஓரத்தில் இருந்து நடு வயல் வரையிலும் காணபட்டால் சாம்பல் சத்து பற்றாக்குறையால் உருவானது எனக் கண்டறியலாம். வயலின் நடுப்பகுதியில் மட்டும் பாதிப்பு இருந்தால் இரும்பு சத்து அதிகம் இருப்பதாகக் கண்டறியலாம். பயிரில் தேவைக்கு அதிகமாக உரங்களை இடுவதாலும், சமச்சீரற்ற ஊட்டச்சத்துகளை அளிப்பதாலும் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், நிலங்களை காயவிடாமல் நீர்ப்பாய்ச்சுவதாலும் பாதிப்பு ஏற்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி முறையை விட சாதாரண முறையில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிரில் இத்தகைய பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
தடுக்கும் முறைகள்: இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்த சாம்பல் சத்தை சற்று கூடுதலாக இட வேண்டும். ஒரு ஹெக்டேர் நெல் பயிருக்கு பரிந்துரைக்கப்ட்ட 60 கிலோ சாம்பல் சத்துடன் கூடுதலாக 30 கிலோவையும் சேர்த்து பயிரின் வளர்ச்சி பருவத்துக்கு தகுந்தபடி பிரித்து இட வேண்டும். மண் பரிசோதனை செய்து அதற்கு தகுந்தபடியும் உரமிடலாம். மேலும், காய்ச்சல் பாய்ச்சல் முறையில் நீர் மேலாண்மையைக் கையாளுவதன் மூலமும் பாதிப்பைத் தவிர்க்கலாம். வளர்ச்சியடைந்த நெல்லில் பாதிப்பு வராமல் தடுக்க 2 சத டிஏபி, ஒரு சத யூரியா, ஒரு சத பொட்டாஷ் ஆகியவற்றை 15 நாள்களுக்கு ஒரு முறை கைத் தெளிப்பான் மூலம் பாதிக்கப்பட்ட பயிர்களில் முழுமையாக நனையும் வகையில் தெளிக்க வேண்டும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த தொழில்நுட்ப முறைகளை தவறாமல் பின்பற்றி மகசூல் இழப்பைக் கட்டுப்படுத்தலாம் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நெல் ஆராய்ச்சி நிலைய மண்ணியல் பேராசிரியர் சு. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

File courtesy:  http://www.dinamani.com/agriculture/2014/01/23/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B0/article2014516.ece

25
Sep

நெல் சாகுபடிக்கு சிறப்பு பயிற்சி

கூடலூர் தோட்டகலைதுறை சார்பில் நெல் சாகுபடி குறித்த சிறப்பு பயிற்சி முகாம், புளியாம்பாறையில் உள்ள கோவை வேளாண்மை பல்கலைக் கழக வீரிய ஒட்டு நெல் ஆராய்ச்சி மையத்தில் நடந்தது.
இதில், வீரிய ஒட்ட நெல் ஆராய்ச்சி மையத்தின் உதவி பேராசியர் டாக்டர் தேவானந்த் பேசுகையில், ""வீரிய ஒட்டு நெல் விதைகளை விதைத்த 15 நாட்களில் நாற்றுகள் நடவு தயாராகி விடும். நெல் நாற்றுகள் பறித்த உடன் நடவு செய்வது வேண்டும். நாற்றுகளை 25 சதுர செ.மீ., இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். நெல் நடவு செய்யப்பட்ட வயல்களில் அதிகளவில் நீர் தேக்காமல், 2 செ.மீ., உயரத்தில் நீர் தேக்கி இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும். இதன் மூலம், எக்டருக்கு வழகத்தை விட 3 டன் வரை மகசூல் அதிகம் கிடைக்கும்,'' என்றார்.
தொடர்ந்து, நெல் நடவு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு, கள பயிற்சி வழங்கப்பட்டது. முகாமுக்கு தோட்ட கலை துறை உதவி இயக்குனர் சிபிலாமேரி தலைமை வகித்தார். முகாமில், துணை தோட்டகலை அலுவலர் சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சரவணன், கோகுல்நாதன், வினோத், அம்பிராஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=810654

31
Jul

சம்பா பட்டத்துக்கு விதை நெல் இருப்பு: வேளாண் அதிகாரி தகவல்

 நாமக்கல்: "சம்பா பட்டத்துக்கு விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்' என, கபிலர்மலை வேளாண் உதவி இயக்குனர் தங்கராஜூ தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சம்பா பட்டத்துக்கு நாற்றுவிட போதுமன விதை நெல், கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, பெரும்பாலான விவசாயிகள் நெல் நாற்றுவிடும் பணியை துவக்கி உள்ளனர். அதற்காக, கபிலர்மலை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், சான்று பெற்ற ஆடுதுறை, 45, வெள்ளை பொன்னி மற்றும் பி.பி.டி., 5,204 ஆகிய நெல் ரகங்கள், தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் ரகங்களை, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் (நெல் இயக்ககம்), விதை கிராமத் திட்டத்தின் கீழ், மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. விதை நெல் தேவைப்படும் விவசாயிகள், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

30
Jul

சம்பா, தாளடிக்கு அதிகளவில் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது

சம்பா, தாளடிக்கு அதிகளவில் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு ள்ளது என்றார் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கே. ராமசாமி.
திருவாரூரில் இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நிகழாண்டு குறுவை இல்லையென்பதா ல் சம்பா மற்றும் தாளடிக்கு அதிகளவில் நெல் விதை உற்பத்தி செய்துள்ளோம். மேட்டூர் அணை ஆக.2-ம் தேதி திறக்கப்படுவதால் மாவட்டத்துக்குத் தேவையான விதைகள் தயார் நிலையில் உள்ளது.வேளாண் அலுவலகங்களில் சி.ஆர்.1009 விதை உள்ளது. இந்த ரக நெல்லில் அரிசி சிகப்பு நிறத்தில் வரலாம் என்பதால் மாற்றாக ஆடுதுறை, 39, ஆடுதுறை 43, கோ 49, கோ 51 வ கை ரக நெல் விதை ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்திலும், கோவை தமிழ்நாடு வே ளாண் பல்கலைக்கழகத்திலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு விதைத் தட்டுப்பாடு இல்லாத வகையில் நெல் விதைகள் வழங்கப்படும். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 40 டன் நெல் விதை மாநிலம் முழுவதும் அனைத் து விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கும் வகையி்ல் மாவட்ட வேளாண் அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்.ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரிப் படுகையில் மண் வளம் நன்றாக உள்ளதாலும், வடிகால் பகுதியென்பதாலும் நெல் அதிகம் பயிரிடப்பட்டு அதிக மகசூல் எடுக்கப்படுகிறது. களிமணி, வண்டல் மண், செம்மன் என்று மூன்று வகை மண் உள்ளது. மண்ணின் தன்மை க்கேற்ப நல்ல ரக விதைகளை பயிரிட்டு அதிக உற்பத்தி செய்ய திருவாரூரில் வேளாண் துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்களுக்கான கருத்தரங்கம் நடைபெறுகிறது.
நிகழாண்டு பருவமழை நன்றாக இருக்கும் என்ற சூழல் நிலவுகிறது. மேட்டூரிலிருந்து சம்பா வுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரை விவசாயிகள் தேவைக்கு ஏற்றால் போல் சிக்கனமாக ப யன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் ஒருங்கிணைந்து சிக்கனத்தை கடை  பிடித்தால் கூடுதலாக ஒரு சாகுபடி செய்யலாம். வெள்ள நீரை குளம் குட்டைகளில் தேக்கி வைக்க வேண்டும்.டெல்டாவில் கடந்த ஆண்டு கையாளப்பட்ட நேரடி நெல்விதைப்பு நல்ல பலனைக் கொடுத் துள்ளதால் நிகழாண்டும் அதைப் பின்பற்றலாம். ஆக. முதல்வாரத்தில் நேரடி நெல்விதைப்பு செய்தால் முளைப்பில் பாதிப்பு இருக்காது. மாவட்டத்தில் மாற்றுபயிருக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தி வரும் மாவட்ட நிர்வாகம், நீர் மேலாண்மையிலும் தனிக்கவனம் செலுத்தி வருவது பாராட்டுக்குரியது.
ஒருங்கிணைந்து விவசாயத்துறையை மேம்படுத்தினால் தமிழகம் உற்பத்தியிலும் முன்னோடி மாநிலமாக வரும் என்பதுடன், தானிய உற்பத்தியிலும் மாநிலம் முதல் மாநிலமாக மாறும் என்றார் ராமசாமி.

Source: http://dinamani.com/latest_news/2013/07/29/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/article1707910.ece 

மேலும் விபரங்களுக்கு,




2
Jul

போதிய விதை நெல் கையிருப்பு

 சிவகங்கை:""மாவட்டத்தில்,தென்மேற்கு பருவ மழையை நம்பி, நெல் நடவு செய்வோருக்கு, தேவையான விதை நெல், 266 டன் வரை இருப்பு உள்ளதென,'' கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: மாவட்டத்தில்,தென்மேற்கு பருவ மழை சராசரி 309 மி.மீ.,ல் இதுவரை, 23.77 மி.மீ., பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஆடிப்பட்ட விவசாயத்திற்கு, தென்மேற்கு பருவ மழை இன்னும் அதிகளவில் கைகொடுக்கும் என நம்புகிறோம். இந்த மழையை நம்பி, நெல், பயிறு வகை பயிர்களை நடவு செய்யும் பணிகளில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.



நடவுக்கு தேவையான விதை நெல் 266 டன் வரை விவசாய விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.



விவசாயிகள், விதை நெல்லை கிலோ ரூ.5 மானியத்தில் பெறலாம். 



அதே போன்று பயறு வகையான உளுந்து விதை 6.8 டன் வரை இருப்பு உள்ளன. 



கிலோவிற்கு ரூ.12 மானியம் வழங்கப்படும். 



எண்ணெய் வித்து பயிரான கடலை விதை 205 டன் இருப்பு உள்ளது. கிலோவிற்கு ரூ.12 மானியத்தில் தரப்படும். 



பயிர்களுக்கு தேவையான யூரியா 680; டி.ஏ.பி., உரம் 211; பொட்டாஷ் 290; காம்ப்ளக்ஸ் 255 டன் வரை உரங்கள், அந்தந்த தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்கள், விவசாய அலுவலகங்களில் இருப்பு உள்ளன.



விவசாயிகள் இதனை பெற்று, பயன்பெறலாம், என தெரிவித்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=747521

 

1
Jul

குறைந்த நிலத்தில் நிறைந்த மகசூல்; வேளாண் அதிகாரி யோசனை

 தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைந்த நில பரப்பில் அதிக மகசூல் பெறுவது குறித்து வே ளாண் அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.சிறந்த வேளாண்மைக்கு அடிப்படையாக விளக்கு வது வளமான நிலமும், நீருமாகும். நிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த இயற்கை உரங்கள் தற்போது இடப் படாமல் செயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவதால் நில மானது வளம் குறைந்து காணப்படுகின்றது. அதே போன்று விவசாயத்திற்கு தேவைப்படும் நீரின் அளவும், பருவமழை சரியாக இல்லாததால் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டியுள்ளது. எனவே நாம் வளமற்ற மண்ணில், குறைந்த நீரைக்கொண்டு அதிக மகசூலை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மேலும் விளைநிலங்கள் அனைத்தும் விலை நிலங்களாக மாறுவதால் குறைந்த பரப்பில் அதிக மகசூலை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். குறைந்த பரப்பளவில் நிறைந்த மகசூலைபெற வேண்டுமெனில் தரமான விதைகளை விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். தரமான விதைகளை பயன்படுத்தினால் நல்ல மகசூலுடன் அதிக லாபத்தையும் பெறலாம். நல்ல முளைப்புத்திறன், குறிப்பிட்ட அளவு, ஈரப்பதம், புறத் தூய்மை, பிறரக காவ லன் இல்லாமை, பிற தானிய விதைகள் இல்லாமை ஆகியவை தரமான விதைகளின் பண்புகளாகும்.நல்ல முளைப்பு திறன் : நல்ல முளைப்பு திறன் கொண்ட விதைகள் குறைந்த அளவிலான சத்தை பயன்படுத்தி வீரியமுள்ள தரமான நாற்றாக வளர்கின்றது. மேலும் இது போன்ற நாற்றுகளை நோய், பூச்சி பூஞ்சானம் ஆகியவை எளிதில் தாக்குவதில்லை. மேலும் இதிலிருந்து கிடைக்கப்பெறும் விதைகளை நாம் அடுத்த பருவத்திற்கு பயன் படுத்தும் போது அதே அளவிலான மகசூலையே பெறலாம். நோய், பூச்சி போன்றவற்றை கட்டுப் படுத்த ஆகும் செலவும் தரமான விதைகளை பயன்படுத்தும் போது வெகுவாக குறைகிறது. இதனால் விவசாயிகள் வாழ்க்கைத்தரம் மேம்பட வழிவகுக்கிறது.பிற ரக கலவன் இல்லா விதைகள் : பிறரக கலவன் என்பது ஒரு பயிரின் ஒரு ரகத்தில் மற்றொரு ரகம் கலந்து இருப்பது ஆகும். ஐஆர்-20-ல் ஐஆர்-50 நெல் ரகங்கள் கலந்து காணப்படுவது. இதனை நாம் விற்பனை நிலையங்களில் இருந்தோ, நாம் வீட்டில் உள்ள விதைகளை பயன்படுத்தும் போதோ தெரிவதில்லை. வயலில் நடவு முடிந்த பின் அடுத்து வரும் பருவங்களில் கலவன்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. ஒரே வயலில் ஒரு ரகம் முதிர்ச்சி அடைந்து கொண்டு இருக்கும் போது மற்றொரு ரகம், பூக்க ஆரம்பிக்கும். இதனால் விவசாயிகள் அறுவடையை குறிப்பிட்ட காலத்தில் முடிக்கவும், ஒரே வகையான ரகத்தை பெறவும் முடியாது. எனவே விளைச்சலுக்கு கிடைக்கப்பெறும் லாபம் வெகுவாக குறைந்து விடுகிறது.ஈரப்பதம் : அறு வடைக்குப்பின் விதை களை நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பதத்தில் சேமிக் கும் போது பூச்சிகள், வண்டு விசூவதை நாம் வெகுவாக குறைக்கலாம். நெல் 13 சதவீதம் ஈரப்பதத்திலும், உளுந்து, பாசி பயிறுவகைகளை 90 சதவீதம் ஈரப்பதத்திலும் சேமித்து வைக்கும் போது பூச்சி தாக்குவதை முழுமையாக கட்டுப் படுத்தலாம். இதன் மூலம் விதைப்புக்காக சேமித்து வைக்கப்படும் விதைகள் பாதிக்கப்படாமல் இருக்க செய்யலாம். மேற்குறிப் பிடப்பட்டுள்ள பண்பு களை விற்பனையாளர்கள் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் ஆகியோர் அறிவியல் முறைப்படி அறிந்து கொள்ள தூத்துக்குடி மாவட்டம் விதைப் பரிசோதனை நிலையத்திற்கு நேரில் அல்லது தபால் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
நெல் - 400 கிராம், மக்காச்சோளம் - 1 கிலோ, உளுந்து, பாசி பருப்பு - 1000 கிலோ , விதை மாதிரி அனுப்ப வேண்டிய அளவாகும். பரிசோதனை செய்ய ஆகும் செலவு - விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.30, மூத்த வேளாண்மை அலுவலர் விதைப்பரிசோதனை நிலையம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முக வரிக்கு அனுப்பலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் விதை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தங் களிடம் இருப்பில் உள்ள விதைகளை பரிசோதனை செய்து பயன்பெறுமாறு விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் கலைச் செல்வி மற்றும் நெடுஞ்செழியன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

21
Jun

திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல்

 திருவாரூர் : திருமண விழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, தாம்பூலமாக, 2 கிலோ விதை நெல் வழங்கிய விவசாயியின் செயல், அனைவரையும் வியப்படைய வைத்தது.

திருவாரூர் மாவட்டம், திருக்குவளையைச் சேர்ந்தவர், காவிரி விவசாய பாதுகாப்புச் சங்க துணை செயலர் லட்சுமணன். இவர், தன் மகள் திருமண விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு, பாரம்பரிய நெல் விதைகளான, மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா மற்றும் கவுனி என, நெல் விதைகளை, "பேக்' செய்து வழங்கினார்.மணமக்கள் இருவரும், பொறியியல் பட்டதாரிகள். தாம்பூலத்திற்கு பதில், நெல் விதை வழங்கியதைக் கண்டு, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் மகிழ்ந்தனர்.

டெல்டா மாவட்ட விவசாயிகள், இயற்கை சீற்றங்களுக்கு ஏற்ப, விவசாயம் செய்யும் நிலையில் உள்ளனர். இந்நிலையில், அனைத்து சூழல்களையும் தாங்கி வளரக் கூடிய விதை நெல், 2 கிலோவை, திருமண தாம்பூலமாக, 867 பேருக்கு வழங்கியதை கண்டு, விழாவில் பங்கேற்ற விவசாயிகள், வியப்படைந்தனர்.

இதுகுறித்து, "நம் நெல்லை காப்போம்' மாநில ஒருங்கிணைப்பாளர், ஜெயராமன் கூறுகையில், "திருந்திய நெல் சாகுபடி முறையில், ஒரு ஏக்கருக்கு, 2 கிலோ விதை நெல் போதுமானது; ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவையில்லை. மறு சாகுபடிக்கும், இந்த விதை நெல்லை பயன்படுத்த முடியும்' என, கூறினார்.

Courtesy :
http://www.dinamalar.com/news_detail.asp?id=737963

18
Jun

மழையால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

 கடலூர்:கடலூரில் கடந்த வாரம் செய்த மழையால், அறுவடைக்குத் தயாராகி இருந்த நெற்பயிர் முளைப்பு விட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.கடலூர் அடுத்த திருவந்திபுரம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது திருமாணிக்குழி கிராமம். இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மலையடிவாரத்தின் கீழ் செழிப்பான நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.ஆழ்குழாய் கிணறு வசதி கொண்ட இந்த நிலத்தில், சொர்ணவாரி பட்டத்திற்காக கடந்த பிப்ரவரி மாதம் நெல் நாற்று வைத்து பராமரித்து வந்தனர். நெல் மணிகள் பிடித்து முதிர்ந்து கதிர்கள் கடந்த வாரம் சாயத் துவங்கியது. அதனையொட்டி விவசாயிகள் இம்மாதம் முதல் வாரத்தில் நெல் அறுவடைப் பணியைத் துவங்கினர்.இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட வெப்பச் சலனம் காரணமாக கடந்த 6ம் தேதி மாலை மாவட்டத்தில் திடீரென காற்றுடன் மழை பெய்தது. அதில் கடலூர் பகுதியில் 21 மி.மீ., மழை பெய்தது. காற்று வேகமாக வீசியதில், திருமாணிக்குழி கிராமத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களின் கதிர்கள் நிலத்தில் சாய்ந்தன. தொடர்ந்து மழை பெய்ததால் மாலையிலிருந்து வடிந்த மழை நீர், அடிவாரத்தில் இருந்த நெல் வயல்களில் தேங்கியது. மேலும், 7ம் தேதி இரவும் கனமழை பெய்தது.இதனால், மலை அடிவாரத்தில் இருந்த 10 ஏக்கர் நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நிலத்தில் சாய்ந்த நிலையில், மழை நீர் தேங்கியதால் நெல் மணிகள் தண்ணீரில் மூழ்கின.


அதிர்ச்சியடைந்த விவசாயிகள், அவசரமாக மழை நீரை வாய்க்கால் வெட்டி வடியச் செய்தனர். இருப்பினும், நெல் பயிர்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கி நனைந்ததால், அனைத்தும் முளைப்பு விடத் துவங்கின. மேலும், நிலம் ஈரப்பதமாக இருந்ததால் இயந்திரத்தைக் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.வேறு வழியின்றி ஆட்களை வைத்து அறுவடை செய்தனர். ஆனாலும், பெரும்பாலான நெற்கதிர்கள் நிலத்திலேயே கொட்டிவிட்டன. எஞ்சிய நெல்களும் முளைப்பு விட்டுள்ளதால் இப்பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி விவசாயி செல்வராஜ் கூறுகையில், "சொர்ணவாரி பட்டத்திற்கு தை மாதம் நாற்று விட்டு, சித்திரை மாத இறுதியில் அக்னி நட்சத்திரத்தின் போது அறுவடை செய்வோம். இந்தாண்டு, சற்று தாமதமாக மாசி மாத இறுதியில் நாற்று விட்டோம். இதனால், அறுவடை தள்ளிப்போனது.
நெல்பயிரில் நல்ல மகசூல் இருந்தது. 7ம் தேதி அறுவடை செய்ய திட்டமிட்டிருந்தேன். அதற்குள், 6ம் தேதி மாலை வீசிய காற்றில் நெற்கதிர்கள் மண்ணில் சாய்ந்தன. தொடர்ந்து பெய்த மழையில் நெற்கதிர்கள் நனைந்து முளைப்பு விட்டு விட்டன. இதனால் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இழப்பீடு கேட்டதற்கு, பகுதி சேதத்திற்கு இழப்பீடு வழங்க முடியாது எனக் கூறி விட்டனர்' என்றார் வேதனை
யுடன். 

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=737085

3
Jun

Cultivators,Agri labourers on the decrease in Tamil Nadu

Courtesy : The Hindu Business Line News Paper. Date : 03.06.2013

10
May

திருந்திய நெல் சாகுபடியில் இரு மடங்கு மகசூல் அனைத்து விவசாயிகளும் பின்பற்ற வேண்டுகோள்

 செய்யூர்:பாரம்பரிய முறையில் சாகுபடி செய்வதை காட்டிலும், திருந்திய நெல் சாகுபடி முறையில் இரண்டு மடங்கு மக‹ல் பெறமுடியும் என்பதால், விவசாயிகள் இப்புதிய தொழில் நுட்பத்தை பின்பற்ற முன்வர வேண்டும் என, வேளாண் துறை கூறி உள்ளது.திருந்திய நெல் சாகுபடி முறை என்பது, குறைந்த நெல் விதையை பயன்படுத்தி, அதிக விளைச்சல் பெறுவது ஆகும். பாரம்பரிய நெல் சாகுபடி முறையில், ஒன்றுக்கும் மேற்பட்ட நாற்றுக்களை, ஒரு குழியில் நடுவர். திருந்திய நெல் சாகுபடியில், ஒற்றை நாற்று மட்டுமே நடப்படும். இதுதான், இந்த தொழில் நுட்பத்தின் சிறப்பு.உற்பத்தி குறைவுநெல் விளைச்சலுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக நெல் மகசூல் குறைந்து வருகிறது. இதற்கு மழை குறைவு, விளை நிலங்கள் மனை பிரிவுகளாக மாற்றப்பட்டது, விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்களை பின்பற்றாதது என, பல காரணங்கள் உள்ளன.நவரை பருவத்தில், கடந்த 2011ம் ஆண்டு, 1,50,009 மெட்ரிக் டன் என, இருந்த நெல் உற்பத்தி, 2012ல், 98802 மெட்ரிக் டன்னாக குறைந்தது. நடப்பாண்டில், 56 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவிற்கு மிகவும் குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்த வகையில், திருந்திய நெல் சாகுபடி முறை சிறப்பான பலனை அளித்து வருகிறது. இம்முறையில், குறிப்பிட்ட இடைவெளியில் நாற்றுக்கள் நடப்படுவதால், பயிர்கள் வளர தேவையான காற்றோட்டம் கிடைக்கும். நாற்றுக்களின் எண்ணிக்கை குறைவதால், தண்ணீர் தேவையும் குறையும். இடைவெளி அதிகமாக இருப்பதால், எலி தொல்லை இருக்காது. களைகள் அதிகமாக வளர்ந்தாலும், கோனாவீடர் கருவி மூலம், ஒரே ஒரு மனித சக்தியை கொண்டு, எளிதாக, வேகமாக களைகளை அகற்ற முடியும்.இதுகுறித்து, திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் பயிரிட்டுள்ள அரசூர் விவசாயி சக்திவேல் கூறியதாவது:பாரம்பரிய சாகுபடி முறையில் நெல் பயிரிட்டபோது, ஒரு போகத்திற்கு, 150 மூட்டைக்கு மேல் மகசூல் கிடைக்கவில்லை. குறைந்தளவு லாபமே கிடைத்தது. திருந்திய நெல் சாகுபடி முறையில், 2.50 ஏக்கரில், நெல் பயிரிட்டேன். ஒரு ஏக்கருக்கு 45 மூட்டைகள் வீதம், 2.5ஏக்கர் நிலத்தில், 115 மூட்டைகள் கிடைத்தன.இதுகுறித்து, இல்லீடு தேசிய வேளாண் நிறுவனத்தில் தெரிவித்தபோது, திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்ய அறிவுறுத்தி, அதற்கான பயிற்சி அளித்தனர். இதையடுத்து, எனது நிலத்தில், 2.50 ஏக்கர் பரப்பில், திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்ய, ஏ.டி.டி.,45 ரக நெல்லை தேர்வு செய்தேன். ஒரு ஏக்கருக்கு, 8 கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதையின் விலை, 33 ரூபாய். நாற்று விட்டு, 25 முதல் 30வது நாட்களுக்குள் நடவு செய்ய வேண்டும்.நடவுக்கு முன், மண் பரிசோதனை செய்ய வேண்டும். பின், அதற்கேற்றவாறு உரம் இடவேண்டும். சாதாரண முறையில் நடவு நட, ஒரு ஏக்கருக்கு 12 ஆட்கள் போதும். ஆனால், திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்ய, 24ஆட்கள் வரை தேவைப்படும். நாற்றுகளை, முக்கால் அடி இடைவெளியில், ஒன்று அல்லது இரண்டு நாற்றுகளை மட்டுமே நடவேண்டும். பயிறுக்கு பயிர் இடைவெளி உள்ளதால், களை எடுக்க, கோனோவீடர் என்ற கருவியை கொண்டு, ஒருவரே களை எடுக்கலாம். மூன்று மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.இரு மடங்கு லாபம்இம்முறை சாகுபடியில், ஒரு ஏக்கருக்கு, அதிக பட்சமாக 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும். சாதாரண முறையில், ஒரு 

ஏக்கருக்கு அதிக பட்சமாக 20 முதல் 25 மூட்டைகள் வரை மட்டுமே கிடைக்கும். திருந்திய நெல் சாகுபடி முறையில்,ஒரு மூட்டை நெல்லை 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். இதன் மூலம், ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. இது, சாதாரண சாகுபடியில் கிடைக்கும் மக‹லை விட இரண்டு மடங்கு அதிகமாகும். என்னை பின்பற்றி, கிராமத்தில் உள்ள சக விவசாயிகளும், திருந்திய நெல் சாகுபடி முறையில், பயிரிட்டு வருகின்றனர்இவ்வாறு, அவர் தெரிவித்தார்.அனைவரும் முன்வர வேண்டும் வேளாண் துணை இயக்குனர் பழனிவேலு கூறுகையில், ""திருந்திய நெல் சாகுடியை, விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள தொழில் நுட்பம் எனலாம். இன்றைய சூழலில், பருவமழை பொய்ப்பு, நிலத்தடி நீர் மட்டம் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விவசாயிகள் பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்து வருகிறது.இதற்கு தீர்வாக, கொண்டு வரப்பட்ட திட்டம் தான் திருந்திய நெல் சாகுபடி முறை. இந்த தொழில் நுட்பத்தில், நெற்பயிர்களுக்கு காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் இருந்தால் போதும். இதுதவிர, விதை, உரம், கூலிஆட்கள் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளின்றி, எளிதாக சாகுபடி செய்ய முடியும். எனவே, அனைத்து விவசாயிகளும் இம்முறையை பின்பற்ற வேண்டும்'' என்றார்.

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=707757

29
Apr

6,000 hectares target for Kuruvai crop

Kuruvai will be raised on 6,000 hectares in Tiruchi district, Joint Director of Agriculture J. Sekar said at the agriculturists’ grievances meeting here on Friday.

For this, about 27 tonnes of certified seeds of ADT 36 and ADT 43 were kept ready at the agriculture extension centres for distribution to farmers, he added. Besides, stocks of pulse seeds and oil seeds were ready.

Courtesy : http://www.thehindu.com/todays-paper/6000-hectares-target-for-kuruvai-cr...

17
Apr

நவரைப் பட்ட நெல் நடவுக்கு இயற்கை உரமிடும் பணி தீவிரம்

விருத்தாசலம் பகுதியில், நவரை பட்ட நெல் நடவுக்காக வயலில் இயற்கை உரமிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விருத்தாசலம், கம்மாபுரம் பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, மின் வெட்டு, கடும் வறட்சி நிலவி வருவதால், நவரைப் பட்டத்தில் பயிர் செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன், நவரை பட்டத்திற்கு விருத்தாசலம், கம்மாபுரம் பகுதிகளில் விவசாயிகள் நாற்று விடும் பணியில் ஈடுபட்டனர். நாற்று வளர்ந்துள்ள நிலையில், நடவு செய்ய ஏதுவாக வயல்களில் இயற்கை உரமிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விருத்தாசலம் சாவடிக்குப்பம், விவசாயி கணேசமூர்த்தி கூறுகையில், "நவரைப் பட்ட நடவுக்காக மூன்று வாரங்களுக்கு முன் அம்பாசமுத்திரம் (16 ஏ.எஸ்.டி - 16 ) ரக நாற்று விட்டுள்ளேன். தற்போது, நாற்று வளர்ந்துள்ள நிலையில், நிலத்தில் இயற்கை தொழுஉரம் இட்டு வருகிறோம். நிலத்தை உழுது ஓரிரு நாட்களில் நடவு பணியை துவக்குவோம்' என்றார்.
Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=691556

17
Apr

புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த விவசாயிகள் தயக்கம்: நடப்பாண்டு நெல் உற்பத்தி கடும் சரிவு

 காஞ்சிபுரம்: தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்து, கூடுதல் சாகுபடியை பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட, திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை, விவசாயிகள் பயன்படு த்த தயங்கி வருவதால், நடப்பாண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், நெல் உற்பத்தி கடுமையாக சரிந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மொத்த சாகுபடி பரப்பு 4.50 லட்சம் ஹெக்டர். பொது பணித்துறை கட்டுப் பாட்டில் 912 ஏரிகளும், ஒன்றிய நிர்வாக கட்டுப்பாட்டில் 1,002 ஏரிகளும் உள்ளன. இவற்றில் இருந்து, 3 லட்சம் ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெற்று, விவசாயம் நடைபெற்று வந்தது. இதனால், நெல் உற்பத்தியில், காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாமிடத்தில் இருந்தது.

குறைந்தது: சமீப காலமாக, பருவ மழை பொய்ப்பு, நிலத்தடி நீர் மட்டம் குறைவு உள்ளிட்ட காரணங்களால், சாகுபடி பரப்பு, 4.50 லட்சம் ஹெக்டரில் இருந்து, 1.90 லட்சம் ஹெக்டராக குறைந்துவிட்டது. இதனால், நவரை பருவத்தில், நெல் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. வேளாண் துறை சார்பில், விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு, விவசாயம் செழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிக மகசூல் ஈட்டும் வகையில், திருந்திய நெல் சாகுபடி நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பல விவசாயிகள் இதில் ஈடுபட தயங்கி வருகின்றனர்.

லாபம் இல்லை: இதுகுறித்து, கோவிந்தவாடியை சேர்ந்த நாகராஜ் கூறுகையில், ""திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இயந்திர நடவு செய்தால், களைக் கூலி அதிகமாக உள்ளது. அதை ஈடுகட்டும் அளவிற்கு இம்முறையில் மகசூல் இல்லை. அதே நுட்பத்தை பயன்படுத்தி, கை நடவு செய்ய நினைத்தால் கூலி ஆட்கள் ஈடு கொடுப்பதில்லை. இதனால், விளைச்சல் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என, நினைத்து, சாதாரண நடவு முறையையே விவசாயிகள் கையாளுகின்றனர்,'' என்றார். இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""பருவ நிலை மாற்றம் காரணமாக, விவசாயம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடியில், விவசாய உற்பத்தி செய்யும் நுட்பம் நடைமுறை படுத்தப்படுகிறது. இம்முறையில் பயிரிட பெரும்பாலான விவசாயிகள் முன் வருவதில்லை. உற்பத்தி குறைந்து விடும் என, அச்சப்படுகின்றனர்.

பார்வையிடலாம்: அச்சத்தை தவிர்க்க, புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அச்சிறுப்பாக்கம், லத்தூர், ஆகிய வட்டாரங்களில், தலா பத்து கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, பசுமை கிராமம் என்ற பெயரில், எட்டு துறைகள் ஒருங்கிணைந்து நெல் பயிரிடப்படுகிறது. இக்கிராமங்களை விவசாயிகள் பார்வையிட்டால், விவசாய யுக்திகளை தெரிந்து கொள்ளலாம். அந்த தொழில் நுட்பங்களை, பிற விவசாயிகள் செயல்படுத்தினால், குறைந்த பரப்பிலும் நெல் உற்பத்தியை பெருக்கலாம்,'' என்றார்.

லாபம் ஈட்டலாம்! திருந்திய நெல் சாகுபடி குறித்து, கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் கூறுகையில், ""நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில், குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் திருந்திய நெல் சாகுபடி நுட்பம் வரவேற்ற தக்கது'' என்றார். தாங்கி கிராமத்தை சேர்ந்த விவசாயி குமார் கூறுகையில், ""திருந்திய நெல் சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு நல்ல பலன் தான். பயிர்களுக்கு குறைந்த ஈரப்பதம் இருந்தால் போதும். இருப்பினும், புதிய மாற்றம் என்பது விவசாயிகளிடையே சிறு தயக்கத்தை ஏற்படுத்துகிறது. முறையாக பின்பற்றினால் போதிய லாபத்தை ஈட்டலாம்'' என்றார்.

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=691861

15
Apr

Adopt SRI, paddy farmers urged

 Collector inaugurates Uzhavar Peruvizha in Thanjavur

Collector K. Baskaran and Rangasamy and Rathinasamy, MLAs distributing farm machinery at Uzhavar Peruvizha which was inaugurated in Thanjavur on Sunday.— PHOTO: B. VELANKANNI RAJ
Collector K. Baskaran and Rangasamy and Rathinasamy, MLAs distributing farm machinery at Uzhavar Peruvizha which was inaugurated in Thanjavur on Sunday.— PHOTO: B. VELANKANNI RAJ
 
District Collector K. Baskaran has appealed to farmers to follow water efficient methods such as System of Rice Intensification (SRI) for paddy cultivation in the district.
Inaugurating the Uzhavar Peruvizha, to be held in all 14 panchayat unions for a month till May 15, the Collector said that last year SRI method of cultivation was taken up on 84,391 hectares of land in 84 villages.
 
He asked the local body representatives such as panchayat union presidents and panchayat presidents to help in the success of Uzhavar Peruvizha by carrying the message of doubling production and increasing income three times.
Uzhavar Peruvizhas are held as part of ushering in the second green revolution.
The Collector flagged off 14 mobile vans, christened Uzhavar Peruvizha rathams, with soil testing and other facilities, on the occasion.
The Collector distributed fodder estimated at Rs. 10,000 each to 10 farmers who had reared the milch animals (cows) given to them well and fodder worth Rs. 19,500 each to 15 farmers who had reared the goats well.
 
The Collector said that cows had been distributed to 1,200 beneficiaries in 24 villages. Goats have been distributed to 10,733 farmers in 219 villages.
M. Rangasamy and M. Rathnasamy, MLAs, Savithiri Gopal, Chairperson of Thanjavur Municipality, Amutharani Ravichandran, Chairperson of Thanjavur District Panchayat Council, Mohammed Tahiya, Joint Director of Agriculture, Thanjavur district participated in the function.
 
Flagged off
Flagging off of the special ratham and awareness rally of students and mini exhibition of various departments on the achievements of the government marked the inauguration of the month long farmers festival in Tiruvarur district on Sunday.
R. Kamaraj, Food Minister, flagged off the ratham titled ‘second green revolution in the field of agriculture’ at a function at Alangudi village.
 
The State government had earmarked Rs. 140 crore for the provision of compensation to farmers who suffered crop loss due to the serious drought situation prevailing in the State.
 
The farmers festivals were planned to provide assistance on new technologies for augmenting the crop production by coordinating the efforts of various departments.
District Collector S. Natarajan presided over the function. G. Ganesan, Joint Director of Agriculture and K. Mayilvaganan, Deputy Director of Agriculture, spoke.
 
A chance to farmers
Staff Reporter from Karur writes:
The State government has always been benevolent to suffering farmers. Chief Minister Jayalalithaa has done yeoman service to their betterment by implementing schemes to meet their specific requirements, Transport Minister V. Senthil Balaji has said in Karur on Sunday.
 
The Minister, who inaugurated the Uzhavar Peruvizha, urged officials from various line departments to sensitise farmers on the opportunities open to them and pave the way for a second green revolution, the cherished dream of the Chief Minister.
 
Farmers’ festival offered a chance to farmers to get rejuvenated by accessing recent technology, getting to know about research and development in various agricultural disciplines, experience sharing with peer groups, adapting latest know-how to their situations and so on.
 
District Collector S. Jayandhi, Karur MP M. Thambi Durai, Krishnarayapuram MLA S. Kamaraj, Joint Director of Agriculture M. Deivendran, Joint Registrar of Cooperative Societies Santhanam, and Deputy Director of Horticulture Sadasivam spoke.
 
Distributed
The District Collector C. Manoharan distributed farm equipments and welfare assistance worth Rs. Three lakhs to farmers at the inaugural of the farmers festival programme in Killanur village in Pudukottai district on Sunday.
 
The collector said farmers festivals would be held in all village panchayats in the 13 unions till May 20. The officials of different departments would explain the programmes being implemented for the benefit of the farming community. The farmers should take advantage of these schemes for augmenting the agricultural produce.
V. C. Ramaiah, president of the District Panchayat, K. Nagarajan, District Revenue Officer, P. M. Perumal, Joint Director of Agriculture, John Joseph, deputy director of Agricultural engineering, N. Annamalai, deputy director of Agricultural Marketing, Vijayakumar, deputy director of Horticulture, and Vairavan, head of the Krishi Vigyan Kendra, spoke.
15
Apr

வீரிய ஒட்டு நெல் சாகுபடியை அதிகரிப்பதே நோக்கம்'

 கோவை : ""2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படும் வீரிய ஒட்டு நெல் சாகுபடியை, 5 மில்லியன் ஹெக்டேர் ஆக அதிகரிப்பதே இந்திய அரசின் நோக்கம்,'' என்று விதை மைய தனி அலுவலர் பாஸ்கரன் பேசினார். 
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை சார்பில், நெல் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 
பயிற்சியில் வேளாண் பல்கலை விதை மைய தனி அலுவலர் பாஸ்கரன், பல்கலை நெல் துறையின் தலைவர் ராபின் உட்பட பல விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
விதை மைய தனி அலுவலர் பாஸ்கரன் பேசியதாவது:
உலகளவில் இந்தியாவில்தான் நெல் அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது. கடந்த 2011-12ல் 103 மில்லியன் டன் நெல் உற்பத்தி செய்து நம் நாடு உலகளவில் இரண்டாம் இடத்தை பெற்றது. 2020க்குள் நெல் உற்பத்தியை 120 மில்லியன் டன் ஆக அதிகரித்தால் தான் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் தேவையை பூர்த்தி செய்ய இயலும். 
இந்தியாவில் 2 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் வீரிய ஒட்டு நெல் பயிரிடப்படுகிறது. அதனை, 5 மில்லியன் ஹெக்டேராக அதிகரிப்பதே இந்திய அரசின் நோக்கம். இதுவரை, 59 வீரிய ஒட்டு நெல்கள் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மாநில அளவில் வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்திக்கான ஆராய்ச்சியில் கோவை, ஈரோடு ஏற்ற இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. வீரிய ஒட்டு நெல் விதை உற்பத்தியை அதிகரிக்க, சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=688889

8
Apr

நெல் வரத்து அதிகரிப்பால் அரிசி விலை திடீர் சரிவு

சேலம்:தமிழகத்தில், நெல் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, அரிசி விலை சரிவடைந்து உள்ளது.இதுகுறித்து, தமிழக நெல், அரிசி வணிக சம்மேளன மாநில துணைத் தலைவர், சியாமளநாதன் கூறியதாவது:தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில், கர்நாடகம், காவிரியில் தண்ணீர் திறக்க மறுத்ததால், நெல் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், நெல், அரிசி விலையில் உயர்வு ஏற்பட்டது.

பண்ருட்டி:செஞ்சி, சேத்பட்டு, செய்யாறு, வந்தவாசி, விருத்தாசலம், தியாகதுருவம், சங்கராபுரம், வானாபுரம், மணலூர்பேட்டை, மத்கடிபட்டு, கடலூர், திருக்கனார், பண்ருட்டி, திருவனைநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள, சந்தைப்படுத்தும் குழுக்களுக்கு விற்பனைக்கு வரும், நெல் வரத்து சமீப காலமாக அதிகரித்துள்ளது.நெல் கிலோ, 12.50 ரூபாயிலிருந்து, 11 ரூபாயாக சரிவடைந்துள்ளது. இதனால், 75 கிலோ கொண்ட ஒரு மூட்டை பி.பி.டி., (பாபத்லால் பொன்னி) அரிசி விலை, 3,100 ரூபாயில் இருந்து, 2,600 ரூபாயாக சரிந்தது. 

ஏ.டி.டி., 37 அரிசி கிலோ, 32 ரூபாய்க்கு விற்றது, இப்போது, 27 ரூபாயாகவும், ஏ.டி.டி., 45 அரிசி கிலோ, 32 ரூபாய்க்கு விற்றது, 28 ரூபாயாக சரிந்துள்ளது.தமிழக அரசு, கூட்டுறவு அங்காடிகள் மூலம், 1 லட்சம் டன் அரிசியை கிலோ, 20 ரூபாய் விலையில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. ஆனால், வெளி மாநிலங்களிலேயே இன்றைய நிலவரப்படி நெல் கிலோ, 13 - 14 ரூபாய்க்கு விற்கிறது. போக்குவரத்து செலவு வகையில், மூட்டைக்கு, 100 ரூபாய் உயர்வு 
ஏற்படும். அப்படி இருக்கையில், எந்த வகையான அரிசியை அரசு வினியோகம் செய்யப் போகிறது, என்பது தெரியவில்லை.

உயர், நடுத்தர ரக அரிசியை, அரசு விற்பனை செய்யும் பட்சத்தில், வெளி சந்தை அரிசி விலையில், சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில், அரிசி விற்பனை மந்த நிலையில் உளளது. இந்நிலையில், அரிசியை, அரசே விற்பனை செய்யும் பட்சத்தில், அரிசி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.மின்தடை:அரிசி ஆலைகளுக்கு மின் தடையில் இருந்து, அரசு விலக்கு அளித்துள்ள நிலையில், போதிய அளவு மின்சாரம் கிடைப்பது இல்லை. எனவே, ஆலைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதோடு, வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லுக்கு, முற்றிலும் வரி விலக்கு அளித்தால், அரிசி விலை தானாக குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, சியாமளநாதன் கூறினார்.

http://www.dinamalar.com/business/news_details.asp?News_id=25316&cat=1

30
Mar

TN delta farmers give go-by to summer paddy

 Chennai, March 29:  For Iyya Kannu and his family, it will be first time in six decades that they are not growing summer paddy this year. They own some 20 acres in the key delta area of Tiruchi district in Tamil Nadu.

“Last week, we farmers in Musiri, Thottiyam in Tiruchi district and Kulithalai in Karur district decided not to plant summer paddy,” he told Business Line over phone.

The summer paddy or short-term Kurvai crop is planted in March and harvested in June.

It makes up one-fifth of Tamil Nadu’s rice production of around 5.5 million tonnes. The country produces a little over 100 mt.

“There is no water to grow any crop. Even the standing banana crop is facing problem,” says Iyya Kannu.

Though the storage level in the 84 major reservoirs in the country is slightly higher than last year, it is at a decade’s low in Tamil Nadu, Andhra Pradesh and Kerala. In Tamil Nadu, the situation is grave with the water levels in five of the six major reservoirs being less than 10 per cent of the capacity.

Overall, in the country, the storage level is 35 per cent of the 154.42 billion cubic metres. Compared with last year, it is two percentage points higher.

The delta area in Tamil Nadu gets water from the Mettur dam. The water level in the dam is only seven per cent of its capacity of 2.65 billion cubic metres.

“The current situation is worse than what we witnessed in 2004-05,” said Manikutty Iyer, Secretary of Tiruchi District Banana Growers Association.

While farmers say nearly one lakh hectares under kuruvai cultivation could be affected, State Agriculture Department officials deny the water shortage could have any impact. A little over three lakh hectares come under kuruvai paddy.

“We usually don’t encourage farmers to go for summer paddy,” said an official, who did not wish to be identified.

“I am 66-years-old. Since childhood, I have seen my family grow summer paddy. It is exclusively done in the Tiruchi delta area since we get some water,” said Iyya Kannu. “We plant groundnut in June but a question mark hangs over that too,” he said.

“Farmers do plant summer paddy depending on the seepage but it is a high risk venture,” the official said.

The problem for Tamil Nadu this year is that due to prolonged dry period the Samba and Navarai crops that make up 80 per cent of the State’s paddy production have also been affected.

“Yield from Samba is lower due to water scarcity,” the official said.

S.A. Sukumar, President of Tamil Nadu Banana Growers’ Association, said standing banana crop in nearly 50,000 hectares faces problem.

“The crop is mid-way through its life stage and we are short of water,” he said.

According to Manikutty, farmers could go in for borewells but power shortage is another problem.

“We can also use diesel pumpsets but the fuel’s price is also rising, leading to higher production costs,” he said.

In Andhra Pradesh, around five lakh hectares under paddy were affected due to water shortage. However, summer paddy is not sown in the State.

Courtesy : http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/tn-del...

26
Mar

நெல்லில் இலைக் கருகல் நோய்கட்டுப்படுத்த ஆலோசனை

நெல் பயிரில் பாக்டீரியா இலைக் கருகல் நோய் கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குநர் அப்பன்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் தற்போது நவரை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இது நெல் பயிர் வளர்ச்சி மற்றும் பூப் பருவத்தில் உள்ளது. இந்த நெல் பயிரில் சில பகுதிகளில் பாக்டீரியா தாக்கி இலை கருகல் நோயின் அறிகுறிகள் காணப்படுகிறது.இந்த @நாயால் முதலில் இலைகளின் ஓரங்கள் பழுப்பு நிறமாக மாறும். பின் நோய் அதிகரிக்கும் போது இலை முழுவதும் பழுப்பு நிறமாகி முடிவில் காய்ந்து விடும்.

இந்நோயின் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்ட உடன் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பயிர் பாதிப்பிலிருந்து மீளும் வரை தழை உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிருக்கு காப்பர் - ஹைட்ராக்சைடு 1 கிராம் 1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து பயிர் முழுவதும நனையுமாறு தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: 
http://www.dinamalar.com/news_detail.asp?id=675199

7
Mar

உளுந்தூர்பேட்டையில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன

 உளுந்தூர்பேட்டை கமிட்டியில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன.உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் சாக்கு பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் எடை போடுவது கடந்த 5ம் தேதி நிறுத்தப்பட்டது. இப்பிரச்னையால் நெல் கொள்முதல் செய்வதை வியாபாரிகள் நிறுத்தி வைத்தனர். மறுநாள் 5ம் தேதி நெல் கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகள் கமிட்டியிலேயே தங்கி, மூட்டைகளுக்கு காவல் இருந்தனர்.ஆனால் நேற்று, வியாபாரிகளும், எடையாளர்களும் நேற்று முன்தினம் வந்த மூட்டைகளில் 240 விவசாயிகளுக்கு லாட் மட் டுமே வழங்கினர். 

மற்ற நெல் மூட்டைகளுக்கும், நேற்று கொண்டு வந்த மூட்டைகளுக்கும் லாட் வழங்கப்படவில்லை.இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் மார்க் கெட் கமிட்டி கண்காணிப்பாளர் சிவநேசனிடம் முறையிட்டனர். இருந்தும் பிரச்னை தீரவில்லை.
நேற்று மதியம் 2.30 மணியளவில் திடீரென மழை பெய்ததால் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் விவசாயிகள் வைத்திருந்த 5,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்தது.இன்றும், நாளையும் நெல் கொள்முதல் செய்யப் படாது என கமிட்டி நிர்வாகத்தினர் மாலை 4.30 மணியளவில் மைக் மூலம் அறிவிப்பு செய்தனர்.
இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் பல ரும் வேறு வழியின்றி நெல் மூட்டைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
Source: 
http://www.dinamalar.com/news_detail.asp?id=662027

Syndicate content
Copy rights | Disclaimer | RKMP Policies