Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரண்டுமுறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ தொழுஉரம் அல்லது மண்புழு உரத்தோடு 80 கிலோ வேப்பம்புண்ணாக்கு, ஒருகிலோ அசோபாஸ் அல்லது தலா 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து ஒருநாள் வைத்திருந்து தூவ வேண்டும். மேல் உரம் கொடுத்து 10 முதல் 15 நாட்களுக்கு பிறகு, வேளாண்மைத்துறை வெளியிட்டிருக்கும் "பச்சைவண்ண அட்டையைப் (லீப் கார்டு) பயன்படுத்தி இலைகளின் நிறத்தைப் பார்க்க வேண்டும். அதில் மூன்றாம் எண்ணுக்கு குறைவாக இருந்தால் மட்டும் மீண்டும் ஒருமுறை அதே உரக் கலவையைத் தெளிக்க வேண்டும்.

நெற்பயிரின் வளர்ச்சிக்கு இயற்கை முறை: மாதம் ஒருமுறை 20 லிட்டர் அமுதக்கரைசல் அல்லது 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீருடன் கலந்து விடலாம். பயிரின் வளர்ச்சியைப்பொறுத்து 25 மற்றும் 30ம் நாட்களில் மட்டும் 10 லிட்ட
 நெல் பயிரை தாக்கும் புகையான் பூச்சியைக் கட்டுப்படுத்த பின்வரும் தொழில்நுட்பங்களைக் கையாண்டு பயிரைக் காக்கலாம் என்று, கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் சே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.கார், சம்பா பருவத்தில் நெல் பயிரை குறிப்பாக, ஐ.ஆர்.-64, பிபிடி மற்றும் ஜலகர பொன்னி போன்ற ரகங்கள் புகையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.அறிகுறிகள்: இந்தப் பூச்சி தாக்கும் வயல்களில் வட்ட வட்டமாக பயிர்கள் தீயில் காய்ந்தது போலக் காணப்படும். இந்தப் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் முற்றிலும் காய்ந்து விடும்.நெல் பயிரின் தண்டு உடைந்து சாய்ந்துவிடும். இதனால், மகசூல் முற்றிலும் பாதிக்கப்படும். தண்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசும்.இந்த வகையான புகையான் பூச்சிகள் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் நெல் பயிரின் தண்டுப
 கடையம் வட்டாரத்தில் கார் பருவத்தில் பரவலாக சாகுபடி செய்துள்ள அம்பை 16 ரகத்தில் ஆங்காங்கே குருத்துப்பூச்சி தாக்குதல் தென்படுகிறது. குருத்துப்புச்சி தாக்குதலினால் அதிக அளவில் மகசூல் இழப்பு ஏற்படும். குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகள் நெல் பயிரின் இலைகளின் நுனியில் குவியல் குவியலாக முட்டையிடும். இம்முட்டைகள் பழுப்பு மற்றும் மஞ்சள் நிற ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இம்முட்டையிலிருந்து வெளிவரும் இளம் மஞ்சள் நிற புழுக்கள் நெல் பயிரின் தூர்களை தாக்கி சேதம் எற்படுத்தும். நெல் பயிரின் சிம்புகள் பாதிக்கப்பட்டவுடன் அழுகி காய்ந்துவிடும். கையினால் இழுத்தவுடன் வந்துவிடும். பொதி பருவத்தில் தாக்குதல் ஏற்பட்டால் வெண்கதிர் வரும். எனவே கடையம் வட்டார விவசாய பெருமக்கள் கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை தற்போத
 வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் விவசாயிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது நெல்லை மாவட்டம் கடையம் வட்டாரத்தில் பரவலாக நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படும். பெத்தான்பிள்ளைகுடியிருப்பு, சம்பன்குளம், ஆம்பூர் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சாவித்திரி நெல் பயிரில் இலைசுருட்டுப்புழு தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
இப்பூச்சிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் காணப்படுகிறது. மழை குறைவாகவும், மேகமூட்டமாக இருக்கும் சூழலில் இவற்றின் தாக்குதல் அதிகமாக இருக்கும். தாய் அந்துப் பூச்சிகள் வெளிரிய பழுப்பு நிறத்தில் பளபளக்கும் மஞ்சள் கலந்த பழுப்பு நிற இறக்கையுடன் காணப்படும்.
வயல்கள்

ஆந்திராவில் உள்ள, நெல் ஆராய்ச்சி இயக்குனரகம்(Directorate of Rice Research, Rajendranagar, Hyderabad)உருவாக்கியுள்ள ரக நெல் பாக்டீரியா நோய் (Bacterial leaf blight) தாக்குதலை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நெல் ரகம் "மேம்படுத்தப்பட்ட சம்பா மசூரி' (Improved Samba Mahsuri) என அழைக்கப்படுகிறது. இந்த ரகமானது உயிரி தொழில்நுட்பக் கருவிகளில் ஒன்றான, மார்க்கெர் அசிஸ்டட் செலக்ஷன்(Marker Assisted Selection) மெத்தடாலஜியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள மாநில வேளாண் பல்கலைக் கழகத்தின் பிரசித்தி பெற்ற ரகமான சம்பா மசூரி (பீபிடி5204) ரகம் கூட, பாக்டீரியா நோய் தாக்குதல்களுக்கு ஆளாகக் கூடியது. ஆனால், மேம்படுத்தப்பட்ட சம்பா மசூரியில், அப்பிரச்னை இல்லை.

Contributed by arunswarnaraj on Sat, 2012-09-01 09:55

Read about Improved Samba Mahsuri
ఇంప్రూవ్డ్ సాంబమసూరి

FIS,Package of Practices,Popular Varieties

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் அறுவடை

1. பயிரின் சராசரி வயதை பொறுத்து, அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன் நீரை வடித்தால், அறுவடை எளிதாக இருக்கும்

2. 80% கதிர்கள் வைக்கோல்நிறத்திற்கு வரும்போது, பயிர் அறுவடைக்கு தயாராகிறது. சில இரகங்களில், இந்த நிலையிலும் பயிர் பச்சையாகவே இருக்கும்

3. நன்கு முற்றிய கதிரை தேர்ந்தெடுத்து, நெல்லை உதிர்த்து பார்க்கவும். அரிசி திடமாகவும் தெளிவாகவும் இருந்தால், பால் முற்றும் தறுவாயில் உள்ளது என அறியலாம்.

4. இந்நிலையில் அதிகமான மணிகள் இருந்தால், பயிர் அறுவடைக்கு தயார். பயிரை அறுவடை செய்து, கதிரடித்து, மணிகளை தூற்றவும்.

5. சேமிக்கும் முன் மணிகளை 12% ஈரப்பதத்திற்கு காய வைக்கவும். 14% ஈரப்பத நிலையில்தான் மகசூலை கணிக்கவும், பிற இரகங்களுடன் ஒப்பிடவும் வேண்டும்.

6. பருவமழை பாதிப்பு ஏற்பட

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடி – நீர் பாசனத்தில் முக்கிய விஷயங்கள்

1. நீர் ஆதாரத்தை பொறுத்து, பாத்திகள் 25 முதல் 50 செண்ட் வரை இருக்கலாம்.

2. ஒரு நிலத்திலிருந்து இன்னொரு நிலத்துக்கு பாசனம் செய்வதை தவிர்க்கவும். வாய்க்காலில் இருந்து நேரடியாக பாசனம் செய்யவும்

3. நீர்க் கசிவு மூலம் இழப்பை தவிர்க்க, முக்கிய வரப்புக்கு இணையாக 30-45 செமீ அகல சிறிய வரப்பு அமைக்கவும்.

4. ஊடுருவல் மூலம் நீர் இழப்பை தவிர்க்க, 5 செமீ மேல் நீர் நிற்காதவாறு பாசனம் செய்யவும்

5. நீர் தேங்கும் பகுதிகளில், 60 செமீ ஆழம் மற்றும் 45 செமீ அகலம் கொண்ட திறந்த வடிகால் குட்டைகள் அமைக்கவும்.

6. வயலில் வெடிப்பு விட அனுமதிக்கக் கூடாது.

7. வாய்க்கால் பாசனப் பகுதிகளில், வாய்க்கால் மற்றும் கிணற்று நீரை மாற்றி மாற்றி பயன்படுத்துவது சிறந்தது.

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் நீர் நிர்வாகம்

1. சேறாக்குதல் மற்றும் நிலம் சமப்படுத்துதல் ஆகியவை நீர் தேவையை குறைக்கும்

2. கேஜ் வீல் கொண்ட டிராக்டர் மூலம் உழுது நீர் இழப்பை 20% வரை குறைக்கலாம்.

3. 2.5 செமீ உயரம் நீரை நிறுத்தி, குறைந்த நார்ப்பொருள் கொண்ட பசுந்தாள் பயிரான சணப்பை 7 நாட்களூக்கும், அதிக நார்ப்பொருள் கொண்ட கொழுஞ்சி போன்ற பயிர்களை 15 நாட்களுக்கும் மக்க வைக்கவும்.

4. நடவு செய்யும் போது, 2 செமீ நீர் மட்டும் வைக்கவும்: ஏனென்றால், அதிக ஆழம் இருந்தால், நாற்றுகள் ஆழமாக நடப்பட்டு, கிளைத்தல் குறையும்

5. நடவு செய்த 7 நாட்கள் வரை 2 செமீ நீர் பராமரிக்கவும்

6. பயிர் நிலைத்த பிறகு, பாய்ச்சலும் காய்ச்சலுமான நீர் பாய்ச்சல் சிறந்தது. பயிர்க்காலம் முழுவதும் இதை கடைபிடிக்க வேண்டும்.

7. வேர் பிடிக்கும் மற்றும் கிளை வ

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் களை நிர்வாகம்

1. ரோட்டரி களைக்கருவியை நடவு செய்த 15 நாட்களிலிருந்து, 10 நாட்காளுக்கு ஒரு முறை பயன்படுத்தவும். இதனால், கூலியாள் செலவு குறைதல், வேர்ப்பகுதி மண்ணில் காற்றோட்டம் அதிகரித்தல், வேர் வளர்ச்சி அதிகரித்தல், மணி முற்றுதல் அதிகரித்து மககூல் கூடுதல் ஆகியவை ஏற்படும்.

2. நெல் + அசோலா இணைந்த சாகுபடி, பசுந்தாள் வளர்ப்பு (ஈர முறை சாகுபடி, 2.5 & 2.6 பகுதிகளில் விவரிக்கப்பட்டுள்ளது) ஆகிய முறைகளால் களைகளை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.

3. கோடை உழவு, மழைக்கு பிந்தைய கால ஸாகுபடி ஆகியவை களைகளை குறைக்கும்

முளைக்கும் முன் கட்டுப்படுத்தும் களைக்கொல்லிகள்

1. எக்டருக்கு 1.25 கிலோ பூட்டாக்ளோர் (அ) 0.4 கிலோ அநிலோபாஸ் ஆகியவை இடவும். இதற்குப் பதிலாக, 0.6 கிலோ பூட்டாக்ளோர் + 0.75 கிலோ 2,4 DEE, அல்லது அநிலொபா

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் வேம்பு அல்லது தார் பூசிய யூரியா பயன்படுத்துதல்

  • யூரியாவை 20% சத அளவு வேம்பு விதை அல்லது வேப்பம் பிண்ணாக்குடன் கலக்கவும். யூரியாவுடன் கலக்கும் முன், வேப்பம் பிண்ணாக்கை 2 மிமி சல்லடையில் சலிக்குமாறு தூளாக்கவும். வயலில் இடும் முன் இரவு முழுவதும் வைத்திருக்கவும் (அல்லது) யூரியாவை ஜிப்சத்துடன் 1:3 விகிதத்தில் கலக்கலாம் (அல்லது) ஜிப்சம் மற்றும் வேப்பம் பிண்ணாக்குடன் 5:4:1 விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.  
  • 100 கிலோ யூரியாவிற்கு, 1 கிலோ தாரை, 1.5 லிட்டர் மண்ணெண்ணை ஆகியவற்றை கலந்து மிதமான தீயில் இளக்கவும். இதில், குச்சியை பயன்படுத்தி யூரியாவை நன்கு கலக்கவும். பாலித்தீன் பாயில் நிழலில் காய வைக்கவும். இக்கலவையை ஒரு மாதாம் வரை வைத்திருந்து, அடியுரமாக பயன்படுத்தலாம்.
Copy rights | Disclaimer | RKMP Policies