Best Viewed in Mozilla Firefox, Google Chrome

பச்சை தத்துப்பூச்சி (Green leafhopper)

PrintPrintSend to friendSend to friend

பச்சை தத்துப்பூச்சி (Green leafhopper)

1. பொதுவான பெயர்-பச்சைத் தத்துப்பூச்சி

2. அறிவியல் பெயர்- நெப்போடெட்டிக்ஸ் வைரஸென்ஸ்

3. உள்ளூர் பெயர்- பச்சை தத்துப்பூச்சி

பச்சைத் தத்துப்பூச்சியின் தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Green leafhopper)

  • இலையின் நுனியிலிருந்து அடிவரை மஞ்சள் நிறமாக மாறுதல்
  • நெல் டுங்ரோ வைரஸ், மஞ்சள் நெல் மற்றும் மாறும் மஞ்சள் நிற நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளுக்கான நோய் தாங்கிகளாக செயல்படுதல்

பச்சைத்தத்துப்பூச்சியினை இனங்கண்டறிதல் (Identification of insect pest of Green leafhopper )

முதிர்ச்சியடைந்த பூச்சிகள் – பச்சை நிற உடலுடன் கருப்பு நிற புள்ளிகள் காணப்படுதல். இறகுகளில் கருப்பு நிற பட்டை மற்றும் திட்டுகள காணப்படுதல்.

பச்சைத் தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்துதல் (Management of Green leafhopper)

  • பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற நெல் வகைகளான ஐ.ஆர் 50, சி ஆர் 1009 மற்றும் சி0 46 போன்றவற்றை சாகுபடி செய்தல்.
  • 20 சென்ட் நாற்றங்காலுக்கு 12.5 கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற அளவில் அடிஉரம் இடுதல்.  
  • வரப்புகளிலுள்ள தாவரங்களுக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தல்
  • பூச்சிகளைப் பிடிக்க விளக்குப்பொறிகளை உபயோகித்தல்
File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies